14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூரியவன்ஷி! ஒரே நாளில் பல சாதனைகள்
வைபவ் சூரியவன்ஷி(vaibhav suryavanshi) என்ற சிறுவனை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் திரும்பி பார்த்துள்ளது.
நேற்றையதினம்(28) 17 பந்துகளில் அரைசதம், 35 பந்துகளில் சதம் அடித்து ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டு சென்ற வைபவ் சூரியவன்ஷி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் சமஸ்திபூர் மாவட்டத்தில் மோதிபூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த வைபவ் சூரியவன்ஷி ஒரு விவசாயின் மகன் ஆவார்.
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் திகதி சூர்யவன்ஷி பிறந்துள்ளார்.
சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள வைபவ் சூரியவன்ஷி எட்டு வயதிலேயே மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிக்கு சூர்யவன்ஷி தேர்வாகியுள்ளார்.
கடந்த 2023-24 ரஞ்சிக் கோப்பை தொடரில் பீகார் அணிக்காக 12 வயது 284 நாட்கள் ஆகியிருந்தபோது வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகி விளையாடினார்.
வினூமன்கட் கோப்பையில் பங்கேற்ற சூர்யவன்ஷி 5 இன்னிங்ஸ்களில் 96 ஓட்டங்களை விளாசினார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான சாலஞ்சர் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து, பங்களாதேசிற்கு எதிராக இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார்.
மேலும் இவரின் சாதனைகள் மற்றும் கிரிக்கெட் வாழ்க்கை என்பவற்றை கீழுள்ள காணொளியில் காணலாம்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
