இலங்கைக்கு IMF விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையில் செலவு மீட்பு அடிப்படையிலான மின்சார விலை நிர்ணயத்தை (cost-recovery electricity pricing) உடனடியாக நடைமறைப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நான்காவது தவணை திட்டத்தின் மதிப்பாய்வு குறித்து விளக்கமளிக்கும் போது, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மிஷன் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நிதி ஆபத்து
இது நிதி ஆபத்துகளைக் குறைப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வை வெற்றிகரமாக முடிப்பதற்கும் அவசியமானது என இவான் பாபஜெர்ஜியோ (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.

மின்சார செலவு, ஊதிய விலை நிர்ணயம் மற்றும் தானியங்கி மின்சார விலை நிர்ணய பொறிமுறை தொடர்பான அத்தியாவசிய சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri