வட்டுக்கோட்டை சந்திக்கு அருகாமையில் விபத்து: முதியவர் வைத்தியசாலையில் அனுமதி
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து, இன்று (04.09.2024) காலை வட்டுக்கோட்டை சந்தியில் இருந்து சித்தங்கேணி நோக்கி செல்லும் பக்கமாக அண்ணளவாக 150 மீற்றர்கள் தூரத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குறித்த இடத்தில் வலது பக்கத்தில் உள்ள கிளை வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை, அதே திசையில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இதன்போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளின் சாரதியும், அவருக்கு பின்னால் அமர்ந்திருந்து தலைக்கவசம் இன்றி பயணித்த முதியவரும் காயமடைந்தனர்.

முதியவர் சம்பவ இடத்தில் மயக்கமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri