விவாதச் சமரில் யாழ்.இந்துவை தோற்கடித்து வட்டு.இந்துக் கல்லூரி தேசியத்திற்கு தெரிவு
மாகாண மட்ட விவாதப் போட்டியில் வெற்றி பெற்று முதல் நிலையை அடைந்த வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் இடம்பெற்ற மாகாண மட்ட அறிவிப்பாளர் போட்டியில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவி அருந்தவன் சரணியா முதல் நிலையை அடைந்து தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில்
நேற்றையதினம் இடம்பெற்ற (29.06.2026) மாகாண மட்ட விவாதப் போட்டியானது யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

பல சுற்றுப் போட்டிகள் நடைபெற்ற நிலையில் இறுதிப் போட்டிக்கு வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி எதிர் யாழ். இந்துக் கல்லூரி தெரிவாகியிருந்தது.
பரபரப்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி விவாத அணி யாழ்.இந்துக் கல்லூரி விவாத அணியை தோற்கடித்து தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.