வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா 2025 இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று (21) ஞாயிறுக்கிழமை காலை 9:00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
காலை விசேட பூசைகள் இடம் பெற்றே கொடியேற்றம் திருவிழா ஆரம்பமாகவுள்ளது.
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார்
வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலமையிலான குருமார் திருவிழா கிரியைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த பெருந் திருவிழாவில் இரண்டாம் நாளான 22.09.2025 திங்கட்கிழமை முதல் 7 ம் திருவிழாவான 27.09.2025 வரை உள்வீதியுலாவும், 28.09.2025 வெளிவீதியில் ஞாயிறுக்கிழமை குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 29.09.2025 திங்கட்கிழமை வெண்ணைத் திருவிழாவும், 30.09.2025 செவ்வாய்க்கிழமை துகில் திருவிழாவும்,
01.10.2025 புதன்கிழமை பாம்பு திருவிழாவும், 02.10.2025 வியாழக்கிழமை கம்சன் போர் திருவிழாவும், 03.10.2025 வெள்ளிக்கிழமை வேட்டை திருவிழாவும், 04.10.2025 சனிக்கிழமை சப்பறத்திருவிழாவும், 05.10.2025 ஞாயிறுக்கிழமை தேர்த்திருவிழாவும், 06.10.2025 திங்கட்கிழமை சமுத்திர தீர்த்த திருவிழாவும், 07.10.2025 செவ்வாய்க்கிழமை பட்டுத்தீர்த்த திருவிழாவும், 08.10.2025 ஆஞ்சநேயர் மடையும் இடம் பெறவுள்ளது.
திருவிழாவிற்க்கான சுகாதார வசதிகளை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், பருத்தித்துறை பிரதேச சபையும் மேற்கொண்டுள்ளதுடன், நிர்வாக ஒழுங்குகளை பருத்தித்துறை நீதிமன்ற பதிவாளர் அவர்கள் தலமையிலும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் ஏனைய பணிகளையும் மேற்கொண்டுளதூடன் பருத்தித்துறை பொலிஸ் நிலையம் மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
