வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக தமிழரசு கு.சுரேந்திரன் தெரிவு..!
யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு, மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக குமாரசாமி சுரேந்திரன் செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சிக்கு 13, அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 4, ஆசனங்களும், தேசிய மக்கள் சக்திக்கு 6 ஆசனங்களும், Epdp 2, உள்ளடங்கலாக மொத்தம் 32 ஆசனங்கள் கொண்ட சபையில் தவிசாளர் தெரிவு இரகசியமாகவா அல்லது பகிரங்க வாக்கெடுப்பதா என வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு இதில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என வாக்களிக்கப்பட்ட நிலையில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு தவிசாளர் உப தவிசாளர் தெரிவு என தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தவிசாளருக்காக கு.சுரேந்திரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் தம்பையா சிவராசா ஆகியோர் முன்மொழியப்பட்டனர். தம்பையா சிவராசாவிற்கு இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கு. சுரேந்திரன் 13. வாக்குகளைப்பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட த.சிவராசா 12. வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார்.
இதில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அதன் தலைவர் சி.வி.கே சிவஞானம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பேச்சாளர் ஐ.ரங்கேஸ்வரன் உட்பட பல அரசியல் கட்சி பிரமுகர் என பலரும் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 6 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தனர். இதில் 7 உறுப்பினர்கள் வாக்களிக்க இல்லை.
உபதவிசாளர் தெரிவிற்கு இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தி.தயாபர்ன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கந்தன் பரஞ்சோதி ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.
நடைபெற்ற உப தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம் பெற்றது. இதில் தியாகராசா தயாபரன் 14 வாக்குகளைப்பெற்று உப தவிசாளரா தெரிவு செய்யப்பட்டார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட கந்தன் பரஞ்சோதி 11 வாக்குகளைப்பெற்று தோல்வியடைந்தார்.

ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan