உலக சுகாதார அமைப்பினால் வாக்குறுதியளிக்கப்பட்ட தடுப்பூசிகள் விரைவில் பெறப்படும் - ஹேமந்த ஹெரத்
உலக சுகாதார அமைப்பின் வாக்குறுதியளிக்கப்பட்ட தடுப்பூசிகள் விரைவில் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் நாயகம், ஹேமந்த ஹெரத் இதனை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தடுப்பூசிகளின் தொகுதி அடுத்த வாரத்திற்குள் இலங்கைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து வழிகாட்டுதலின் கீழ் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்குத் தடுப்பூசி வழங்குவதை அரசாங்கம் ஆரம்பிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தடுப்பூசி செயல்முறை மற்றும் தடுப்பூசி மையங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் பகுதி மக்களுக்குத் தெரிவிப்பார்கள் என்று சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பெற ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படுமென்று அவர் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கையில் தடுப்பூசி திட்டத்தின் கீழ் மொத்தம் 553,821 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
