வவுனியாவில் 500 இராணுவத்தினருக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்
வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் 500 இராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசிகள் இன்று ஏற்றப்பட்டது.
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட்-19, “கொவிஷெல்ட்” தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள்,மருத்துவ சேவையாளர்கள், பாதுகாப்பு படையினருக்கு ஏற்றும் பணி இன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில், வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் நேற்று வழங்கப்பட்டது. ,அதனை செலுத்தும் பணிகள் வவுனியாவில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தில் உள்ள இராணுவத்தினர் 500 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தடுப்பு ஊசிகள் ஏற்றப்பட்டிருந்தது.







புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
