மார்ச் முதல் வாரத்தில் பொது மக்களுக்கு கோவிட் - 19 தடுப்பூசி! இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
கோவிட் - 19 தடுப்பூசி மார்ச் முதல் வாரத்திலிருந்து பொது மக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோயியல் மற்றும் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் பேசிய அவர், “தடுப்பூசி காரணமாக இதுவரை பெரிய பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார்.
அத்துடன், காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் பொதுவானவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒக்ஸ்போர்டு அஸ்ட்ரா செனெகா - கோவ்ஷீல்ட் தடுப்பூசியின் ஒரு டோஸ் கோவிட் -19 வைரஸின் பரவலை சுமார் 67 வீதம் குறைப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவதால் பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜன் சோதனைகளின் எண்ணிக்கையையும் குறைக்க முடியும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, நாட்டின் அனைத்து மக்களுக்கும் கோவிட் - 19 தடுப்பூசி வழங்க 4000 மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் இதனை போது தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் தொடங்கும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது தினமும் சுமார் 600,000 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
