மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன (Channa Jayasumana) கூறியுள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள தடுப்பூசி மையங்களின் மூலம் மொத்த மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசியை செலுத்த முடிந்துள்ளது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது ஒரு மகத்தான சாதனை" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமானால், தற்போதைய தொற்று வேகத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு வரும் என்ற நிலையில், வரவிருக்கும் சில வாரங்களில் பொறுப்புடன் இருக்குமாறு, அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri