தடுப்பூசியினால் பாரியளவு பக்க விளைவுகள் ஏற்படவில்லை: சுகாதார அமைச்சு
தடுப்பூசியினால் பாரியளவு பக்க விளைவுகள் எதுவும் இதுவரையில் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
காய்ச்சல், தசைவலி உள்ளிட்ட பொதுவாக தடுப்பூசி ஏற்றல்களின் போது ஏற்படக்கூடிய சில பக்க விளைவுகளைத் தவிர பாரதூரமான பிரச்சினைகள் எதுவும் பதிவாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பொதுமக்கள் தடுப்பூசி தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்பொழுது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தடுப்பூசி விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் வரையில் சுமார் 59000 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam