இலங்கையில் தடுப்பூசியால் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த முடியாத நிலை
இலங்கையில் கொவிட் தடுப்பூசி மூலம் டெல்டா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை என விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் வேகமாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுத்தாலும் இதுவரையில் டெல்டா வைரஸ் பரவலை தொடர்ந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்து வருவதாக சங்கத்தின தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் பரவலை தொடர்ந்து தடுப்பூசி மூலம் கிடைக்கக் கூடிய அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் சில வாரங்களுக்குள் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் எண்ணிக்கை மேலும் தீவிரமடையும்.
சரியான நேரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நிலைமை இதனை விடவும் பயங்கரமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri