காத்தான்குடியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றல்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தவகையில் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் கோவிட் -19 தடுப்பூசிகள் இன்று சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.
கோவிட் -19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.பசீர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், காத்தான்குடி பிரதேச செயலகம், காத்தான்குடி நகர சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவினர் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொதுமக்களுக்கான சினோபாம் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri