வடக்கில் இதுவரை 62 வீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றல்!
"வடக்கு மாகாணத்தில் மக்கள் தொகையில் 30 வயதுக்கு மேற்பட்ட 62.09 சதவீதமானோர் கொரோனாத் தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"வடக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 6 இலட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களில் நேற்று வரை 4 இலட்சத்து 8 ஆயிரத்து 284 பேர் கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸையாவது பெற்றுள்ளனர்.
இது 62.09 சதவீதமாகும். வடக்கில் மன்னார் மாவட்டத்தில் 67.54 சதவீதமானோர் கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.
அடுத்தபடியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 63.70 சதவீதமானோர் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்கள் முறையே 3, 4, 5ஆம் இடங்களில் உள்ளன" - என்றார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
