யாழில் கோர விபத்து : குடும்பப் பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றையதினம்(20.12.2025) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
மூளாய் பகுதியை சேர்ந்த தாயும் மகளும் யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பூஜையில் கலந்துகொள்ள அர்ச்சனை பொருட்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.

இதன்போது எதிர் திசையில் , வந்த கழிவகற்றும் வாகனத்தை முந்திக்கொண்டு வந்த மோட்டார் சைக்கிளால் தாயும், மகளும் பயணித்த மோட்டார் சைக்கிள் தடுமாறி இருவரும் மோட்டார் சைக்கிளுடன் வீதியில் விழுந்துள்ளனர்.
இதன்போது , யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் கழிவுப் பொருட்களை ஏற்ற வந்த தனியாருக்கு சொந்தமான பவுசர் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மூளாய் பகுதியை சேர்ந்த எஸ். வரதராணி (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan