கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பை கல்வி அமைச்சு( Sri Lankan Ministry of Education ) வெளியிட்டுள்ளது.
அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழுவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கைக் கல்விச் சேவையின் தரம் 1 உத்தியோகத்தர்களிடமிருந்து அந்தப் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அறிவிப்பு
விண்ணப்பங்கள் கோருவதற்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்ட அறிவிப்பு, பாடசாலைப் பதிவு, மதிப்பெண் நடைமுறை, மாதிரி விண்ணப்பப்படிவங்கள் என்பன கடந்த 11ஆம் திகதி கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, இணையதளத்தில் உள்ள 'விசேட விளம்பரங்கள்' பிரிவின் கீழ் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதித்திகதி டிசம்பர் 31ஆம் திகதி என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
