தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உருவாக்கம்: குழப்பத்தை ஏற்படுத்தும் உவிந்து விஜேவீரவின் கருத்து
தமிழீழ விடுதலைப் புலிகள் ஏன் உருவாக்கப்பட்டனர்? அந்த அமைப்பை இந்தியாவே உருவாக்கியது. அன்று இந்தியாவின் நண்பராக இருந்த சிறிமாவோ அம்மையாருக்கு எதிராக ஜே.ஆர். ஜெயவர்தன செய்த காரியத்திற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.
அதனால் இனப்பிரச்சினை என்பது சிங்கள - தமிழ் பிரச்சினை அல்ல என இரண்டாம் தலைமுறை கட்சியின் தலைவரும் ரோகண விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள்.
இந்தியாவின் பங்களிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் உருவாக்கம் தொடர்பில் பயமின்றி எந்த இடத்திலும் நான் பேசுவேன்.அதை நான் பொறுப்பேற்கிறேன்.இந்த அமைப்பை உருவாக்குவதற்கும் போஷிப்பதற்கும் பின்னால் இருந்தது இந்தியாதான்.
பயிற்சி மற்றும் தங்குமிடங்கள் அனைத்தும் அங்கேயே இருந்தன.இறுதியாக இந்தியாவுக்கே அது தலையிடியாக மாற்றமடைந்தது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகுதான் அவர்கள் அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள்.
எனவே, இவை அனைத்திற்குள்ளும் கூறப்படும் கதை என்னவென்றால், இந்த நாடு துண்டாடப்படுவதைப் பற்றியதாகும். உலகில் இதுவரை பல நாடுகள் இரண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளன.
சூடான், வட சூடான், தென் சூடான், டார்ஃபர் என ஒரு பகுதி பிரிக்கப்பட்டது. பப்புவாநிவ்கினி கினியா மற்றும் நியூ கினியா என இரு துண்டுகளாக உடைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது.
பிரித்தாளும் ஆட்சி
பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் பிரிக்கப்பட்டது. இன்றும் கூட ஜம்மு காஷ்மீரில் அடித்துக் கொள்கிறார்கள். சூடானில் இன்று மனிதர்கள் கொல்லப்படுவதை யாரும் கண்டு கொள்வதில்லை.
அப்படியென்றால் இந்த 'பிரித்தாளும் ஆட்சி' யாருக்குத் தேவை? இப்போது நாமும் கட்சி ரீதியாக அடித்துக் கொள்கிறோம்.இந்த அரசாங்கத்தின் விதியையும் சர்வதேச சக்திகள்தான் தீர்மானிக்கின்றன, கடந்த அரசாங்கத்தின் விதியையும் அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.
இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், நமது எதிரி நமது சக மனிதன் அல்ல. குறைகள் இருக்கலாம். அநுர உட்பட முன்னாள் ஜனாதிபதிகளிடம் குறைகள் இல்லை என்று நான் கூறவில்லை.
அவர்கள் முழுமையானவர்கள் என்றும் கூறவில்லை.இதற்கு அப்பால் சிந்திக்குமாறுதான் நான் அழைப்பு விடுக்கிறேன்.அதனை நாம் புரிந்து கொண்டால், அதற்குரிய பதிலும் நமக்குக் கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன்.
YOU MAY LIKE THIS VIDEO