தனது மகன் பொலிஸில் சரணடைவார்: ஊவா மாகாண ஆளுநர் உறுதி
பெண் ஒருவரை தாக்கி, காயப்படுத்திய சம்பவம் தொடர்பில், தனது மகன் மொஹமட் இசாம் ஜமால்தீன் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க மாட்டார் என்றும், நாளை பொலிஸார் முன்னிலையில் பிரசன்னமாவார், என்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.
மேலும், தமது மகன் தலைமறைவாகவில்லை செவ்வாய்க்கிழமையோ அல்லது அதற்கு முன்னதாகவோ பொலிஸில் சரணடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக முஸம்மில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பதை பொலிஸாரே ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் முஸம்மில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் விசாரணை
கொழும்பு ஹெவ்லாக் டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் முகமது இசாம் ஜமால்தீனைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அதிகாலையில் ஜமால்தீன் பெண்ணைத் தாக்கியதாகவும், இதன்போது காயங்களுக்கு உள்ளான பெண், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சந்தேகநபர் கொள்ளுபிட்டி மற்றும் கெப்பிட்டிபொல ஆகிய பகுதிகளில் உள்ள தமது வீட்டிலிருந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |