எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் - அமைச்சர் அறிவிப்பு
நாட்டில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) அறிவித்துள்ளார்.
நிதி அமைச்சு நிவாரணங்களையோ அல்லது விலைச் சலுகைகளையோ வழங்காவிட்டால் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு லீற்றர் பெற்றோலை 25 ரூபாவிலும், ஒரு லீற்றர் டீசலை 15 ரூபாவிலும் அதிகரிக்க ஐ.ஓ.சீ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையேற்றத்திற்கு அனுமதி கோரியுள்ளது.
இந்த கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படுகின்றன. எனினும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எரிபொருட்களின் விலைகளை தற்போதைக்கு அதிகரிக்க வேண்டாம் என அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), எரிசக்தி அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
