அமெரிக்க டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயருமென கணிப்பு: இன்று பதிவாகியுள்ள நிலவரம்
2022ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 360 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், அது 450 - 500 ரூபாவாக உயரும் என கணிக்கப்பட்டதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ரூபாவின் பெறுமதியின் பலன் படிப்படியாக மக்களுக்கு கிடைக்கும். ரூபா பெறுமதி வலுவடைந்தமையினால், கடனை திருப்பிச் செலுத்தும் சுமை குறைவடைந்தமையும் இங்கு முக்கியமானது.
சந்தை தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் மாற்று விகிதங்கள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அமெரிக்க டொலரின் பெறுமதி
2022ஆம் ஆண்டில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உத்தியோகபூர்வமாக 360 ரூபாவாக அதிகரித்துள்ளது. அது 450 - 500 ரூபாவாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலவரப்படி அந்த விகிதம் 300 என்ற அளவில் பேணப்பட்டு வருகிறது.
மேக்ரோ பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை உணர்ந்து அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் இதுவரை வெற்றியடைந்துள்ளது. அதன் விளைவாக நாடு புதிய அபிவிருத்திப் பாதையில் பயணிக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
