பிரித்தானிய வங்கியில் பதுக்கப்பட்டுள்ள இலங்கையின் பெருந்தொகை டொலர்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் இலங்கைக்கு பெருந்தொகை நட்டஈடு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Sri Lanka's Justice Minister requests investigation into alleged $250 million bribe paid to a party involved in X-Press Pearl fire compensation negotiations. Funds reportedly transferred to a London bank account. "I got this info, I don't know it's true or not, CID inquiring it"… pic.twitter.com/Od0H5650L7
— NewsWire ?? (@NewsWireLK) April 13, 2023
குறித்த டொலர் தொகை பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை தான் கோரியுள்ளதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.