சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பின் முன்னெடுப்புடனும் கஞ்சிக்குடிச்சாற்றில் உதவி திட்டம்!
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சிக்குடியாறு கிராமத்தில் கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக, கஞ்சிக்குடியாறு கிராமிய கூட்டுறவு சங்கம் ஊடாக வள்ளங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் கஜேந்திரன் தலைமையில் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த திட்டம் சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பின் முன்னெடுப்புடனும் , அன்புநெறி ((USA) நிதி உதவியுடனும் Assist RR IMHO USA இணை அனுசரணையுடனும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்வின்போது கஞ்சிகுடியாறு கிராமிய கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டதன் அவசியம் தொடர்பில் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயம் மற்றும் மீன் வளங்களை பயன்படுத்தி கிராம முன்னேற்றத்தை நீண்ட கால நோக்கில் திட்டங்களை வகுத்து அபிவிருத்தி பணியில் ஈடுபட வேண்டும் என திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் கஜேந்திரன் குறிப்பிட்டார்
இந்த கிராமத்தில் 89 மீனவர்கள் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன






