தலைமைத்துவத்தை இழந்தது ஈரான்..! அணு ஆயுதம் இன்றி முற்றிலுமாக அழித்துவிடுவோம் - ட்ரம்ப் ஆக்ரோசம்
அணு ஆயுதம் இல்லாமலேயே நாங்கள் ஈரானை முற்றிலுமாக அழித்து விடுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்றைய தினம் (23.04.2026) செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அணு ஆயுத பயன்பாடு
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதில்லை. நாங்கள் ஏன் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும்?
அது இல்லாமலேயே மிகவும் வழக்கமான முறையில் அவர்களை நாங்கள் முற்றிலுமாக அழித்துவிடுவோம். ஈரானுடனான போதை முடிவிற்கு கொண்டு வர அவசரமில்லை. ஈரானுக்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது.
ஹோர்முஸ் நீரிணையில் நமக்கு கட்டுப்பாடு உள்ளது. ஹோர்முஸை திறப்பதாக ஈரான் சொன்னது. பிரச்சினை தீரும் வரை ஈரான் தினசரி 50 கோடி டொலர் சம்பாதிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை.

தலைமைத்துவத்தை இழந்த ஈரான்
ஈரான் தலைமைத்துவத்தை இழந்துவிட்டது. அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். ஈரானின் இராணுவம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. தடுப்பு அமைப்புகள் அழிந்துவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈரானின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri