இலங்கை தமிழர்கள் தொடர்பில் அமெரிக்காவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்தியாவுடன் ஒத்துழைத்து இலங்கை தேசத்தில் ஒரு அரசியல் தீர்வுக்கு கூட்டாக அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவொன்று, சிரேஷ்ட சட்ட நிபுணர்களான கே.கனக்-ஈஸ்வரன் மற்றும் நிர்மலா சந்திரஹாசன் ஆகியோருடன் அண்மையில் வோஷிங்டன், அமொிக்காவின் ராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடனான சந்திப்பின்போது இந்தக் கோரிக்கையை விடுத்ததாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
அமொிக்கா மீண்டும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு திரும்பியுள்ள நிலையில், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பான பிரச்சனைகளுடன், தமிழ் தேசியப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வையும் பரிந்துரைப்பது முக்கியம் என்று தாம் கருதுவதாக சுமந்திரன் லண்டனில் இருந்து தி ஹிந்துவிடம் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்துவதற்கு முன்னர் தமது கூட்டமைப்பு, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் தொடர் சந்திப்புக்களை நடத்தியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜெனீவா மனித உாிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான "முக்கிய குழுவிற்கு இங்கிலாந்து தலைமை தாங்கும் நிலையில் லண்டனில் இங்கிலாந்து அதிகாரிகளுடன் சுமந்திரன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதற்கிடையில் மாகாணங்களுக்கு போதுமான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படாமல், சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான முயற்சிகள் மற்றும் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களுக்குப் பல அச்சுறுத்தல்கள் மூலம் தமிழ் பெரும்பான்மையான வடக்கு மற்றும் கிழக்கின் மக்கள்தொகையை மாற்றும் அரசாங்கத்தின் பாரிய திட்டத்தை தாம் ஏற்க முடியாது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
