அமெரிக்க நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்! குடியுரிமையை எளிதாக பெறக்கூடியவர்கள் குறித்து புதிய தகவல்
அமெரிக்காவில் குடியுரிமை பெற விரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள Excellence in Technology, Education, and Science (Competes) Act வாயிலாக அந்நாட்டில் முக்கியமானவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய தீர்மானத்தின் மூலம் ஸ்டார்ட்அப் மற்றும் பிஹெச்டி பட்டம் பெற்றவர்கள் எளிதாக அமெரிக்காவில் குடியுரிமை பெற முடியும் என தெரியவருகிறது.
என்ற போதும் இப்புதிய தீர்மானம் அமெரிக்காவில் சட்டமாக மாறுவதற்கு முன்பு இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்ட இரு கட்சி மாநாட்டுக் குழுவால் இது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இதேவேளை அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் முதன்மையாக அமெரிக்காவின் போட்டித்தன்மையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் EB5 பிரிவில் வாயிலாக முதலீட்டாளர்கள் விசா பெறும் முறை உள்ளது போதும் கூட குடியுரிமை பெற முடியாது.
எனினும் தற்போது தாக்கல் செய்யப்பட்டு உள்ள தீர்மானத்தின் மூலம் கனடா, அவுஸ்திரேலியா போல நேரடியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் பிஹெச்டி பட்டம் பெற்றவர்கள் அமெரிக்காவில் எளிதாக குடியுரிமை பெற முடியும்.
மேலும், அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்காக புதிய சட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், இதனை தொடர்ந்து கிரீன் கார்ட் பெறுவதில் நிலுவையில் உள்ள விண்ணப்பதாரர்கள் 5000 அமெரிக்க டொலர்களை கூடுதலாக செலுத்தி விண்ணப்ப வரிசையில் முன்னேறி விரைவாக கிரீன் கார்ட்டை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கடந்த வருடம் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
அமெரிக்காவின் கிரீன் கார்ட் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்