அமெரிக்காவின் கருத்து வெறும் எச்சரிக்கை அல்ல: உன்னிப்பாக அவதானிக்க கோரிக்கை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு ஒரு முக்கிய அரசியல் கட்டத்தை அடையும்போது, இந்த செய்தி எமக்கு கிடைத்தமையை நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற திலீத் ஜயவீரவுக்கான ஆதரவு கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சுற்றுலா பயணிகள்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
''தங்கள் நாட்டில் இருந்து இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு, 'இலங்கையில் வன்முறை, கலவரம், பயங்கரவாதம் போன்ற சம்பவங்கள் நடக்கலாம்' என, அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.

தேர்தல் நாளில் இதுபோன்ற செயல்கள் மத ஸ்தலங்களில் நடக்கலாம் என கூறியுள்ளது.
அமெரிக்கா இவ்வாறு கூறுவதென்பது வெறும் எச்சரிக்கை அல்ல, அன்று, பங்களாதேஸில் ஒரு புரட்சி நடத்தப் போகிறது என்று ரஷ்யா எச்சரித்தது.
அதன் அடிப்படையில் இன்று அந்த நாடு பாரிய அரசியல் மாற்றத்தை கண்டுள்ளது.
அரசியல் கட்சி
எனவே இந்த நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளையும் நாங்கள் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் கொள்கை அல்லது கருத்து எதுவாக இருந்தாலும், 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், இலங்கையின் அமைதிக்கு கறுப்பு புள்ளி இட வேண்டாம்.
இந்த நாட்டில் கலவரங்கள் இல்லாமல் நடைபெற்றுவரும் அமைதியான தேர்தல் வரலாற்றில் கறைபடிய அனுமதிக்க வேண்டாம்" என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கண்ணே கலைமானே சீரியல் நடிகை... எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா? Cineulagam