வெனிசுலாவில் நிலவும் பதற்றம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை - ட்ரம்பின் மற்றுமொரு அறிவிப்பு
அமெரிக்க இராணுவத்தின் தாக்குதல்களில் குறைந்தது 40 வெனிசுலா வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலாவின் மூத்த அதிகாரியை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை
இதற்கிடையில், அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி பெருநகரத்தில் உள்ள ஒரு தடுப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

வெனிசுலாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கை மற்றும் வெனிசுலாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் நாளை (5) அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசியூலாவில் ஆட்சி நிர்வாகத்தை அமெரிக்கா பின்னின்று மேற்கொள்ளுமென்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள்
பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான மாற்றத்தை நாங்கள் செய்யக்கூடிய காலம் வரும் வரை நாங்கள் அங்கு ஆட்சியை நடத்தப் போகிறோம். எனவே வேறு யாராவது இதில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பவில்லை, கடந்த நீண்ட காலமாக நாங்கள் கொண்டிருந்த அதே நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம்.

வெனிசுலாவின் மக்களுக்கு அமைதி, சுதந்திரம் மற்றும் நீதியை நாங்கள் வழங்க விரும்புகிறோம். வெனிசுலாவில் எண்ணெய் வணிகம் நீண்ட காலமாகவே நலிவடைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
நமது மிகப் பெரிய அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் உள்ளே சென்று, பில்லியன் கணக்கான டொலர்களை செலவழித்து, மோசமாக சேதமடைந்த உள்கட்டமைப்பை சரிசெய்து, நாட்டிற்கு பணம் சம்பாதிக்கத் தொடங்கப் போகிறோம் என்றும் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.