அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி
அமெரிக்க பல்பொருள் அங்காடியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 6பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா வர்ஜீனியாவில் உள்ள வொல்மாட் பல்பொருள் அங்காடி ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரி
பெயர் குறிப்பிடப்படாத துப்பாக்கிதாரி, சேசபீக்கில் உள்ள கிளையில் சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
பின்னர் துப்பாக்கிதாரி தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
இத் தாக்குதல் மேற்கொண்டமைக்கான நோக்கம் இன்னும் தெரியவரவில்லை
துப்பாக்கி கலாசாரம்
அண்மையில் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள LGBT இரவு விடுதியில் துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
