சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் சர்வதேச மாணவர்களை குளிர்கால விடுமுறையில் இருந்து திரும்புமாறு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்கின்றார்.
அவர் பதவியேற்பதற்கு முன்னதாக பல அமெரிக்க கல்லூரி வளாகங்களில் பதற்ற நிலை உருவாகலாம் என்பதால் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இந்த அறிவுறுத்தலை வழகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருண்ட காலம்
2023-2024 கல்வியாண்டில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்வி பயில அனுமதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பியவுடன், தனது முந்தைய பயணத் தடையை விரிவாக்குவது உட்பட, கடுமையான குடியேற்றக் கொள்கைகளை கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் குடியுரிமை அல்லாத விசாக்களையே கொண்டுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமெரிக்காவின் சர்வதேச மாணவர்களுக்கு இருண்ட காலம் ஆரம்பமாகும் என சர்வதேச மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
