இலங்கையின் கடன் மறுசீரமைப்பு: அமெரிக்காவின் விசேட அறிவிப்பு!
இலங்கையின் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்துடன் தொடர்புடைய மதிப்பாய்வுகளை சரியான முறையில் அவர்களுக்கு செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.
இந்தியாவில் ஆரம்பமாகும் ஜி 20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அமெரிக்க-சீனா உறவு

கடந்த வாரம் பீய்ஜிங்கிற்கான தனது பயணம் அமெரிக்க-சீனா உறவை 'நிச்சயமான நிலைக்கு' கொண்டு வர உதவியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு நாடுகளிடமும் உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்கள் இருக்கின்றன. இந்தநிலையில பரஸ்பர அக்கறை கொண்ட பகுதிகளில் ஒத்துழைக்க கடமையிருப்பதாகவும் அமெரிக்க திறைசேரி செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஏழ்மையான நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகளில் சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா 'ஆவலுடன்' இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam