வடக்கு - கிழக்கில் சட்டவிரோத நில அபகரிப்பு: அமெரிக்காவிடம் தமிழர் தரப்பு வலியுறுத்து
புதிய இணைப்பு
வடக்கு - கிழக்கு பகுதிகளில் உள்ள நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் 13 ஆம் சீர்திருத்தம் நடைமுடைபடுத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க செனட் சபை உறுப்பினரிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன் உடன் பத்தரமுல்லையில் இன்று(30.08.2023) இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
''குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற நட்புறவு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
Today, Senator Van Hollen and I met with the Sri Lanka-U.S. Parliamentary Friendship Association Secretariat to highlight the vital role of Parliament in U.S.-Sri Lanka relations and our shared commitment to cooperation and diplomacy. #USSriLanka75 pic.twitter.com/Otl7A7wQMR
— Ambassador Julie Chung (@USAmbSL) August 30, 2023
அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை
நான் 13 ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த போது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்க்கும் விதமான கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் எமது நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், குறிப்பக வன்னி பிரதேசத்திற்கு உற்பட்ட மகாவலி அபிவிருத்தியின் ஊடக சிங்கள மக்கள் குடியேற்றப்படும் விடயத்தினை தெளிவுபடுத்தியிருந்தேன்.
யுத்தத்தின் பின்னர் 14000 சிங்கள மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவற்றின் பின்னணியை மையப்படுத்தியே அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயத்தினை முன்வைத்துள்ளேன்.
அத்துடன் காணாமலாக்கப்பட்டோருக்கான தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது எனவும் இதன் போது நினைவுபடுத்தியிருந்தேன்.
இதன்போது செனட் சபை உறுப்பினர், காணாமலாக்கப்பட்டோரின் 3 தாயாரை சந்தித்ததாகவும், அதற்கான நீதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் முனைவதாக அவர்களிடம் தெரிவித்துள்ளதாக எம்மிடம் கூறியிருந்தார்.
On this International Day of the Victims of Enforced Disappearances, the United States stands in solidarity with the victims, along with their families and friends, in their struggle for answers and justice. Each day, they carry the burden of uncertainty, wondering about the fate… pic.twitter.com/WO327gZDCz
— U.S. Embassy Colombo (@USEmbSL) August 30, 2023
அதன் பின்னர், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கத்தினால் அமைக்கப்படும் குழுக்கள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், அதற்கான தீர்வினை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.'' என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலன், இலங்கை கடற்படையின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதி அவசியம் என கிறிஸ் வான் ஹொலன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையின் எஸ்.எல்.என்.எஸ் கஜபாகு மற்றும் எஸ்.எல்.என்.எஸ் விஜயபாகு கப்பல்களை வான் ஹொலன் இன்று(30.08.2023) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
சட்டவிரோத கடத்தலை எதிர்த்துப் போராடுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு மற்றும் ஏனைய கடல்சார் பாதுகாப்புப் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கான அமெரிக்காவின் முயற்சியாக இந்த இரண்டு கப்பல்களும் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்டிருந்தன.
இந்த கப்பல்களை பார்வையிடச் சென்ற வான் ஹொலனுடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கும் உடன் சென்றிருந்தார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி
மேலும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிறிஸ் வான் ஹொலன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை நேற்று(29.08.2023)சந்தித்துள்ளார்.
இந்நிலையில் தாம் கிறிஸ் வான் ஹொலனை வரவேற்றதாகவும் அவர் இலங்கையின் மிக நீண்டகால நண்பர் எனவும் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.
A free and open Indo-Pacific region is essential to the safety and prosperity of countries around the world. Today, Senator Van Hollen and I visited the SLNS GAJABAHU (P 626) which was commissioned on June 6, 2019, later joined by its sister ship the SLNS VIJAYABAHU (P 627), in… pic.twitter.com/EeUzBtrmcr
— Ambassador Julie Chung (@USAmbSL) August 30, 2023
இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த கிறிஸ் வான் ஹொலன் கடுமையாக உழைத்தவர் எனவும் ஜுலி சங் கூறியுள்ளார்.
செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வான் ஹொலனும் தாமும் இணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சியை ஆராயவுள்ளோம் எனவும் அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் மேம்பட்ட பங்காளித்துவத்திற்கான வழிகளைப் பற்றி கலந்தாலோசிக்கும் அதேவேளை ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கான கூட்டு அர்ப்பணிப்பை ஆழமாக்குவோம் என ஜுலி சங் குறிப்பிட்டுள்ளார்.
செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வன்ஹொலனின் தந்தையார் 1972 முதல் 1976 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றியுள்ளமை, இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கான 75 வருடகால கூட்டாண்மையை மேலும் வலுவாக்குகின்றது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை கிறிஸ் வான் ஹொலன் மற்றும் ஜுலி சங் ஆகியோர் இணைந்து ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி மற்றும் இலங்கையின் குடிசார் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
75 ஆண்டுகால இருதரப்பு கூட்டாண்மை, சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மீட்சிக்கான கடனுதவியை பெறுவதன் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்புகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு மற்றும் மிகவும் அமைதியான மற்றும் வளமான உலகத்தை உறுதிசெய்ய நாம் ஒன்றிணைந்து செயல்படும் புதிய வழிகளைப் பற்றி அலி ஷப்ரியுடன் விவாதித்ததாக ஜுலி சங் கூறியுள்ளார்.
இதேவேளை குடிசார் சமூக செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மை சமூகங்கள் உட்பட அனைவருக்குமான மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை தாமும் கிறிஸ் வன் ஹொலனும் வலியுறுத்தினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் தீர்வை வலியுறுத்திய அதேவேளை நல்லிணக்க செயற்பாடுகளில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியதாக அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மேலும் கூறியுள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 5 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
