அமெரிக்காவின் இறக்குமதி வரி.. நாமல் முன்வைத்துள்ள யோசனை
இலங்கை மீது அமெரிக்கா 44 வீத பரஸ்பர வரி விதித்ததை தொடர்ந்து, நாடு பொருளாதார சவால்களை எதிர்கொள்வதால், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "அமெரிக்காவின் இந்த வரிகள் ஆடை போன்ற முக்கிய துறைகளை கடுமையாக பாதிக்கும். அத்துடன் வேலையின்மையை அதிகரிக்கவும் வழிவகுக்கும்.
பொருளாதார நெருக்கடி
கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை இன்னும் மீண்டு வருவதால், அரசாங்கத்தின் ஏற்றுமதி இலக்குகள் இப்போது ஆபத்தில் உள்ளன.
இதனால் பொருளாதார மீட்சி இன்னும் கடினமாகிறது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை என்றால், வரவு - செலவு திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஏற்றுமதி வருவாயைப் பராமரிக்க மாற்றுத் தீர்வுகளைத் தேட வேண்டும்” என அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த மிகப்பெரிய தடையை நாம் எதிர்கொள்ளும் வேளையில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட துறைகளை ஆதரிக்க வேண்டிய நேரம் இது என்றும் நாமல் ராஜபக்ச மேலும் கூறியுள்ளார்.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
