15 நாடுகள் குறித்து ட்ரம்ப் எடுத்துள்ள புதிய தீர்மானம்!
அமெரிக்கா, பரஸ்பர வரி விதிப்பு குறித்து புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரி திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
புதிய தீர்மானம்
இதற்கமைய, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுடன் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 சதவீதம் சாத்தியமாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வர்த்தக ஒப்பந்தம்
இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடனான சந்திப்பைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது ஆரம்பத்தில் 20 சதவீத வரி விதித்து பின்னர் 90 நாட்களுக்கு அதைத் தாற்காலிகமாக ட்ரம்ப் நிறுத்தினார்.