காலதாமதமாகும் சீனப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள்
சீனப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மேலும் 90 நாட்களுக்கு தாமதப்படுத்தியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த வரிகள் இன்று( 12) மீண்டும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தன.
ஆனால், அதனை நவம்பர் நடுப்பகுதி வரை காலக்கெடுவை நீடிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
அமெரிக்க-சீன பேச்சுவார்த்தை
கடந்த ஜூலை மாத இறுதியில் ஸ்டொக்ஹோமில் நடந்த அமெரிக்க-சீன பேச்சுவார்த்தைகளின் விளைவாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரலில் ட்ரம்ப் சீன இறக்குமதிகள் மீதான முழுமையான வரிகளை 145வீதமாக உயர்த்தியிருந்தார்.
புதிலடியாக சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 125வீத வரியை விதித்தது.ஆனால் ஜெனீவாவில் பேச்சுவார்த்தையின் பின்னர், மே மாதத்தில் அந்த வரிகளில் பெரும்பாலானவற்றை இடைநிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
இதன்படி அமெரிக்கா தனது வரிகளை 30வீதமாக குறைத்தது, சீனா தனது வரிகளை 10 வீதமாக குறைத்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




