8 முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்கள் குறித்து ட்ரம்பின் தீர்மானம்
அமெரிக்காவில் உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் வகையிலும், குடிவரவுத் திட்டங்களில் நடக்கும் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையிலும், ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இதன்படி, மைக்ரோசொப்ட் (Microsoft), அடோப் (Adobe) மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ் (TCS), இன்ஃபோசிஸ் (Infosys), விப்ரோ (Wipro), ஹெச்சிஎல் (HCL), காங்னிசன்ட் (Cognizant), கேப்ஜெமினி (Capgemini) ஆகிய 8 முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியுரிமை (Green Card) வழங்குவதற்காக விண்ணப்பிக்கும் PERM சான்றிதழ் திட்டத்தில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
விசாக்கள் இரத்து
அமெரிக்க தொழிலாளர் செயலாளர் கீத் சாண்டர்லிங் மற்றும் துணைத் தலைவர் ஜே.டி. வேன்ஸ் ஆகியோரால் அறிவிக்கப்பட்ட இந்தத் தடையால், இந்நிறுவனங்களின் புதிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் செயலாக்கமும் நிறுத்தப்படும்.

அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு வெளிநாட்டு ஊழியர்களை அதிகளவில் பணியமர்த்துவதாக இந்நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை தற்போதைய எச்-1பி (H-1B) விசாக்களை உடனடியாக இரத்து செய்யாது என்றாலும், வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான முக்கிய வழியைப் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அநுரவுக்கு உதவிய விடுதலைப் புலிகள்! தனிப்பட்ட ரீதியில் அர்ச்சுனாவுக்கு கிடைத்த தகவல் என அறிவித்த மகிந்த தரப்பு