அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: முதலீட்டுச் சட்டத்தின் கீழ் தனியார் வழக்குகள் தொடரத் தடை
அமெரிக்காவின் முக்கிய கூட்டாட்சிப் பத்திரங்கள் சட்டத்தின் கீழ், தனியார் தரப்பினர் வழக்குத் தொடர்வதைக் கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உலகப் புகழ்பெற்ற சொத்து முகாமைத்துவ நிறுவனமான பிளாக்ராக் மற்றும் பிற முதலீட்டு நிதி அமைப்புகளுக்குச் சாதகமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.
1940ஆம் ஆண்டின் முதலீட்டு நிறுவனச் சட்டத்தின் கீழ், நிதி நிறுவனங்களின் உள்விதிமுறைகளை எதிர்த்து சபா கெப்பிடல் மாஸ்டர் ஃபண்ட் போன்ற ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரிக்கை
உச்ச நீதிமன்றத்தின் 6-3 என்ற பெரும்பான்மை அடிப்படையில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பில், பழமைவாத நீதிபதி அமி கோனி பாரெட் தனது தீர்ப்பறிக்கையில், முதலீட்டு நிறுவனச் சட்டமானது தனியார் தரப்பினர் நிறுவனங்களின் உள்விதிகள் அல்லது ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி நீதிமன்றத்தை நாடுவதற்கான எந்தவொரு பிரத்தியேக உரிமையையும் வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

சட்டத்தின் விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான முழு அதிகாரம் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கு மட்டுமே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நியூயோர்க் கீழ் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சபா கெப்பிடல் நிறுவனத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்திருந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவு கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாகத் தலைகீழாக மாற்றியுள்ளது.
இந்தத் தீர்ப்பு அமெரிக்காவில் உள்ள மூடிய-முனை நிதியங்கள் மற்றும் பெரிய முதலீட்டு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக மாறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 23 மணி நேரம் முன்
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam