கோவிட் தொற்றுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவு!
கோவாக்ஸ் வசதிக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதன் மூலம் கோவிட் தொற்றுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று இலங்கைக்கான தூதுவர் எலைய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இராஜதந்திர மற்றும் பொருளாதார விஷயங்கள் உட்பட இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த பல பிரச்சினைகள் பேசப்பட்டன.
மேலும், எரிசக்தித் துறையின் எதிர்காலத்திற்காக அமெரிக்காவின் எதிர்கால முதலீடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் தற்போதைய தேர்தல் முறையை சீர்திருத்தும் நோக்கத்திற்காக ஒரு சிறப்பு குழுவை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுக்களை மீண்டும் நிறுவுவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாக அமெரிக்க தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.