இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தையை ஆதரிக்கிறோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் வாஷிங்டனில் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆதரவு
மேலும், "நாங்கள் நீண்ட காலமாக கூறியது போல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தையை நாங்கள் ஆதரிக்கிறோம். அதுவே நீண்டகாலமாக எங்களின் நிலைப்பாடு" எனவும் கூறியுள்ளார்.
அனைத்து தீவிரமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |