ட்ரம்ப் அதிரடியாக கைப்பற்றிய கப்பல்.. சர்வதேசத்தில் வலுக்கும் போர் பதற்றம்
வெனிசுலா கடற்கரையில், தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளதுடன் வாஷிங்டன் மற்றும் கராகஸ் இடையே பதற்றங்களை கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்ப் இது குறித்து தெரிவிக்கையில், "வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலை நாங்கள் கைப்பற்றியுள்ளோம், பெரிய எண்ணெய் தாங்கி கப்பல், மிகப் பெரியது, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியது” என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக, வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றார்.
முதல் நடவடிக்கை
இந்நிலையில், வெனிசுலாவுக்கு எதிராக ட்ரம்ப் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் பதற்றத்தை அதிகரித்து வருகின்றன.

இதற்கிடையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக, வெனிசுலா அரசாங்கம் ஒரு அறிக்கையில் அமெரிக்காவை "அப்பட்டமான திருட்டு" என்று குற்றம் சாட்டியுள்ளதுடன் இந்த பறிமுதல் "சர்வதேச கடற்கொள்ளையர் செயல்" என்று சாடியுள்ளது.
சர்வதேச அமைப்புகளுக்கு முன்பாக இந்த சம்பவத்தை கண்டிப்பதாக வெனிசுலா அறிவித்துள்ளது. வெனிசுலாவில் அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கான சாத்தியக்கூறுகளை ட்ரம்ப் பலமுறை சுட்டிக்காட்டி வருகின்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள அமெரிக்கத் தடைகளுக்கு மத்தியில் வெனிசுலா எண்ணெய் சரக்குக் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட முதல் நடவடிக்கை இதுவாகும்.
மேலும், பிராந்தியத்தில் பாரிய இராணுவக் கட்டமைப்பை ஏற்படுத்த உத்தரவிட்டதிலிருந்து வெனிசுலா தொடர்பான தாங்கிக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும்.
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam