மீண்டும் ஒரு எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா: தொடரும் முரண்பாடு
கரீபியன் கடலில் மீண்டும் ஒரு எண்ணெய் கப்பலை, அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. இது கடந்த சில வாரங்களிலான ஐந்தாவது கப்பல் கைப்பற்றல் நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ராணுவம் ஒலினா எனப்படும் எண்ணெய் கப்பலை எவ்வித சம்பவங்களும் இன்றி கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கடற்படை மற்றும் உள்துறை பாதுகாப்புப் படை என்பனவற்றின் இணைந்தகுழு இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன்
கப்பல் கிழக்கு திமோர் கொடிக்கீழ் பயணித்தாலும், அது அமெரிக்கா விதிக்கப்பட்ட தடைப்படுத்தப்பட்ட எண்ணெய் மூலம் சார்ந்ததாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா இவ்வாறு கடலில் பயணிக்கும் எண்ணெய் கப்பல்களை கைப்பற்றுவது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பல்வேறு தரப்பினர் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா இவ்வாறு எண்ணெய் கப்பல்களை கைப்பற்றுவதனால் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுடன் கடும் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri