டக்ளஸ் தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப் புலனாய்வு திணைக்களம்
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அரசாங்கத்திற்கு திருப்பி வழங்கப்பட்ட 30 துப்பாக்கிகள் அரசாங்கத்தால் அவருக்கு வழங்கப்பட்டவை அல்ல என குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தால் அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட சில துப்பாக்கிகளை அவர் இன்னும் திருப்பித் தரவில்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியது.
மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறியது.
முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு
துப்பாக்கி தொடர்பான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர், கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு குற்றவாளி மாகந்துரே மதுஷின் விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.