இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் பங்கேற்பு
இந்தியாவில் நடைபெறும் ஜி20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அந்தோணி பிளிங்கன் நேற்றைய தினம் புதுடில்லியைச் சென்றடைந்தார்.
ஜி20 நாடுகளின் தலைமையை இந்தியா பொறுப்பேற்று ஓராண்டு ஆகின்றது.
இதனை முன்னிட்டு, புதுடெல்லியில் மார்ச் முதலாம் மற்றும் 2 ஆகிய திகதிகளில் ஜி20 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
40 நாடுகளின் பிரதிநிதிகள்
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஜி20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரவ் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு
அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.