இலங்கை இராணுவத்துடன் இரகசிய தொடர்பை அதிகரித்த நாடு
இலங்கை இராணுவத்துடனும் உளவு துறையுடனும் இரகசிய தொடர்பை அமெரிக்கா பேணுவதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை தெரிவு செய்தாலும் அவர் இலங்கை இராணுவத்தின் கட்டளைக்கமைய செயற்பட வேண்டும் என்ற நிலையை உருவாக்குவதற்கான முன்னேற்பாடுகளை அமெரிக்கா செய்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையை அமெரிக்கா தனது ஆதிக்க நாடாக வைத்திருக்க முயல்வதாக ஏற்பட்டுள்ள ஐயம் தற்போது உறுதியாக ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர் வேல் தர்மா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் ஆதிக்கம் தொடர்பில் தெளிவுப்படுத்துகிறது இன்றைய ஊடறுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |