ட்ரம்பின் அதிரடி தடையால் உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்காவின் புதிய பொருளாதார தடை காரணமாக உலக கச்சா எண்ணெய் விலையில் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யாவின் இரண்டு முக்கிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil மீது புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தொடர் போர் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பை அமெரிக்கா விடுத்துள்ளது.
போர் நடவடிக்கை
இதன் தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக வியாழக்கிழமை உலக கச்சா எண்ணெய் விலைகளின் இரண்டு முக்கிய அளவுகோல்களும் 5 வீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.
பியூச்சர்ஸ் சந்தையில் உடனடியாக தடைகளின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. அதிகாலை 5:19 மணி அளவில் டிசம்பர் மாத விநியோகத்திற்கான வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியட் (WTI) 5.21 வீதம் ஏற்றம் கண்டு பேரல் ஒன்றுக்கு $61.51 ஆக வர்த்தம் செய்யப்பட்டுள்ளது.
இதைப்போல, டிசம்பர் மாத விநியோகத்திற்கான ப்ரெண்ட் க்ரூட்(Brent Crude) 5.11வீதம் ஏற்றம் கண்டு பீப்பாய் ஒன்றுக்கு 65.72 டொலராக ஏற்றம் கண்டுள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



