மீண்டும் சிக்கலில் பெக்கோ சமன்: சொகுசு பேருந்துகளும் பறிமுதல்
சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட "பெக்கோ சமன்" என்பவருக்கு சொந்தமான இரண்டு சொகுசு பேருந்துகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகளில் ஒன்று, சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக கட்டுநாயக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டபோது, பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றுமொரு சொகுசு பேருந்து, மொனராகலை-கொழும்பு வீதியில் பயணிக்கும் பயணிகள் பேருந்து ஆகும்.
வேறு நபர்களின் பெயரில் பதிவு
குறித்த பேருந்து புறக்கோட்டை தனியார் பேருந்து நிலையத்தில் பயணத்திற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு பேருந்துகளும் பெக்கோ சமனால் வேறு நபர்களின் பெயரில் வாங்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |