தேர்தல் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதி
அமெரிக்காவின் சமுத்திரங்கள் மற்றும் சர்வதேச சுற்றாடல் மற்றும் விஞ்ஞான விவகாரங்களுக்கான பதில் உதவி இராஜாங்க செயலாளர் ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பித்துள்ள நிலையில் இராஜாங்க செயலாளரின் விஜயம் முக்கியதுவம் பெற்றுள்ளது.
இம்மாதம் ஒகஸ்ட் 17 முதல் ஒகஸ்ட் 31 வரை இலங்கை, , இந்தியா, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
Acting Assistant Secretary Littlejohn is traveling to Colombo, Sri Lanka; Chennai, India; New Delhi, India, and Male; Maldives.
— U.S. Department of State | Science Diplomacy USA (@SciDiplomacyUSA) August 16, 2024
விசேட சந்திப்புகள்
அமெரிக்காவின் முன்னாள் தொழிலாளர் பணியகத்தில் கொள்கை திட்டமிடல் மற்றும் பொது இராஜதந்திரத்திற்கான இயக்குனரக செயற்பட்ட இவர், சர்வதேச மட்டத்திலான இராஜதந்திர விவகாரங்களை கையாண்டுள்ளார்.
இந்நிலையில், அவரது வருகையின் போது, இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் காற்று மாசுபாடு, காலநிலை நெருக்கடி, காடழிப்பு, இயற்கை குற்றங்கள், சிவில் மற்றும் வணிக விண்வெளி நடவடிக்கைகள், STEM இல் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்குவிப்பது மற்றும் நிலையான நீல பொருளாதாரம் குறித்து விவாதிப்பார், இலங்கையில் ஒகஸ்ட் 19 முதல் 21 வரை, அவர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பங்காளிகளைச் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆதரவளிக்கும் வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களைப் பார்வையிடுவார் எனவும், காலநிலை மாற்றம் போன்ற முன்னுரிமைப் பகுதிகளில் அமெரிக்க நிபுணர்களுடன் இலங்கையர்களை இணைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வார் எனவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |