பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை அவசியம் : இலங்கையை மீண்டும் வலியுறுத்தும் அமெரிக்கா
இலங்கையின் இரண்டாவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இந்தநிலையில் முதலீடு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் பிரதிநிதித்துவ நிர்வாகத்தை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க இலங்கையின் தலைவர்களை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது என்று அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
We welcome the @IMFnews approval of Sri Lanka's second review. Recognizing that reforms can be challenging, the United States continues to encourage Sri Lanka's leaders to stay committed to take needed measures that ensure accountability, transparency, and representative…
— Ambassador Julie Chung (@USAmbSL) June 14, 2024
அமெரிக்காவின் கருத்து
48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு நேற்று (13.06.2024) இரண்டாவது மதிப்பாய்வை நிறைவுசெய்தது.
இதன்படி இலங்கைக்கு மூன்றாம் தவணையாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற அனுமதி வழங்கப்பட்டதனையடுத்தே அமெரிக்காவின் கருத்து வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |