வெனிசுலாவின் மூன்றாவது எண்ணெய் கப்பலை துரத்தி வரும் அமெரிக்கா
வெனிசுலா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், அந்நாட்டு எல்லைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் தடைகளை மீறிச் சென்ற மூன்றாவது எண்ணெய் கப்பலை அமெரிக்க கடலோரக் காவல்படை துரத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெனிசுலாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பல்களைத் தடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராணுவப் பலம்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கறுப்புச் சந்தையில் இயங்கும் கப்பல்களே பிடிக்கப்படுவதால் அமெரிக்காவில் பெட்ரோல் விலை உயராது என வெள்ளை மாளிகை கூறினாலும், இந்த மோதல் போக்கினால் திங்கட்கிழமை ஆசியச் சந்தையில் மசகு எண்ணெய் விலை உயரக்கூடும் என வர்த்தகர்கள் அஞ்சுகின்றனர். அமெரிக்காவின் இத்தகைய தலையீடுகள் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என பிரேசில் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா தனது இராணுவப் பலத்தை அப்பகுதியில் அதிகரித்துள்ளதால் தென் அமெரிக்கப் பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 15 மணி நேரம் முன்
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri