வவுனியாவில் பரபரப்பு! வாள்வெட்டு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
வவுனியா வீரபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் வவுனியா தவசிகுளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் உட்பட சிலர் இன்றையதினம்(21.12.2025) மாலை வவுனியாவில் இருந்து வீரபுரம் பகுதிக்கு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது அவர்கள் மீது அந்த பகுதியை சேர்ந்த குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தவசிகுளம் பகுதியை சேர்ந்த யோ.அபிசாந் வயது 19 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கையினை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam