யாழில் கோர விபத்து! ஒருவர் பலி- ஒருவரின் நிலமை கவலைக்கிடம்
யாழ்ப்பாணம் புத்தூரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்தானது இன்று(2025.12.21) மாலை இடம்பெற்றுள்ளது.
கார் விபத்து
யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ள நிலையில் எதிரே வேகமாக பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது எதிரே வந்த கார் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் அதிவேகமாக பயணித்த இளைஞர்கள் பலத்த காயங்களுக்குள்ளாகினர். இதில் புத்தூர் மணற்பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலதிக விசாரணை
மேலும் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிரே மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும், தாயும் மகனும் சிறு காயங்களுக்குள்ளாகினர்.
காயமடைந்தவர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri